வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கிய நாமல்
கடந்த 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலக கோரி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இதன்போது போராட்டகாரர்கள் மீது கடந்த 9ம் திகதி அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறை ஏற்பட்டது.
இவ் வன்முறை சம்பவத்தில் மொத்தமாக 10பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,
இப் போராட்டங்களின் காரணமாக மகிந்த ராசபக்ச தமது பிரதமர் பதவியை இராஜிராம செய்தார். அத்துடன் தற்போதும் ஜனாதிபதியை பதவி விலக கோரி தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| வன்முறைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்- நாமல் கோரிக்கை! |
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri