குற்றவாளிகள் அழைத்து வரப்படுவது இது முதல் தடவையல்ல : நாமல் சாடல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் இதற்கு முன்னரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது ஒன்றும் முதல் தடவையல்ல என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாள்ளார்.
அமைச்சர்களுக்கு செல்லும் கப்பம்
தொடர்ந்து பேசிய நாமல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் கும்பலை நாட்டுக்கு கொண்டு வரும் போது அவர்களை வரவேற்க அமைச்சர் செல்கிறார்.
இந்த அரசாங்கம் அவர்களின் சில தவறுகளை மூடி மறைக்க சில கண்காட்சிகளை நடத்துகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தவுடன், சுங்கத்தில் பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட 350 கொல்கலன்கள் தொடர்பான பிரச்சினை மறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சிச்சியின் செய்மதி பெலவத்தையில் விழுந்தது. அதுவும் இன்று மறக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது பிரசாரத்தில் யுத்தத்தை விற்று பிழைப்பதாக தெரிவித்தனர். இவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளது.அமைச்சர்களுக்கு செல்லும் கப்பம் குறைந்துள்ளது என்றால் இன்று 150 ரூபாவால் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும்.
ஆனால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினரை நாட்டுக்கு அழைத்து வந்து எரிபொருள் விலை குறைப்பை மூடி மறைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



