உயர் பதவியில் உள்ள இரு புலனாய்வு அதிகாரிகள் குறித்து நாமல் பகிரங்க குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முன் எச்சரிக்கைகளை புறக்கணித்த இரண்டு புலனாய்வு அதிகாரிகளை தற்போதைய அரசாங்கம் உயர் பதவிகளில் நியமித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் குறித்து முன்னர் பெற்ற தகவல்களை புறக்கணித்த இரண்டு புலனாய்வு அதிகாரிகளுக்கு முன்பே தகவல் கிடைத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களில் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியிருந்தது.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பான இரண்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் இன்று சிறையில் உள்ளனர்.
இருப்பினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முன் எச்சரிக்கைகளை புறக்கணித்த இரண்டு புலனாய்வு அதிகாரிகளை தற்போதைய அரசாங்கம் உயர் பதவிகளில் நியமித்தது" என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



