அநுரவின் மகனுக்கு மிஹின் லங்கா ஏர்லைன்ஸில் வேலை பெற பரிந்துரைத்தாரா நாமல்..! அவரே வெளியிட்ட தகவல்
தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவின் மகனுக்காக மிஹின் லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பரிந்துரை செய்தமை குறித்த விடயம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளம் மூலமாக இது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.
நிறைய பேருக்கு உதவி
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நான் நிறைய பேருக்கு உதவியுள்ளேன். அதில் ஒருவராக அநுரகுமாரவின் மகன் இருந்திருக்க கூடும்.

இல்லாமலும் இருந்திருக்கலாம். எனினும் அது தொடர்பில் நாம் அதிகளவில் அவதானம் செலுத்த தேவையில்லை என நான் நினைக்கிறேன்.
அரசியல் செய்பவர்களாக இருக்கலாம், இல்லாதவர்களாக இருக்கலாம் எனினும் அவர்களின் பிள்ளைகளுக்கு இந்த காரணங்களுக்கும் சம்பந்தமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam