நாமலின் அருகில் கோட்டாபய ராஜபக்ச
புதிய இணைப்பு
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச வேட்பு மனு கையொப்பமிட்ட வேளையில் வேளையில் கோட்டாபய ராஜபக்சவும் அருகில் இருந்துள்ளார்.
இன்று (14) விஜேராமவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) இல்லத்தில் வைத்து அவர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ,இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின்(Namal Rajapaksa) சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாமல் ராஜபக்ச சார்பில் கட்டுப்பணம் சற்று முன்னர் செலுத்தப்பட்டுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், நாமல் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஏற்கனவே சமபிம கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச என்ற மற்றுமொரு வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நண்பகலுடன் கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் பூர்த்தியாவதுடன் நாளைய தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

Bigg Boss Season 9: போட்டியாளராக களமிறங்கியுள்ள கேரளா மாடல்! யார் இந்த திருநங்கை அப்சரா சிஜே? Manithan
