நிறுவனம் ஒன்றின் பிரதானி பதவிக்கு இரண்டு பேரை பரிந்துரைத்த நாமல் ராஜபக்ச
பூகோளவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் கீழ் இயங்கும் ஜீ.எஸ்.எம்.பீ தொழிற்நுட்பட சேவைகள் (GSMB Technical Services) என்ற நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு பேரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.
கடிதம் மூலம் பரிந்துரையை அனுப்பிய நாமல் ராஜபக்ச
சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு அனுப்பியுள்ள நாடாளுமன்ற கடித தலைப்புடன் கூடிய கடிதம் மூலம் நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதனடிப்படையில் அந்த பதவிக்கு எம்.எச்.டி.பீ. கருணாரத்ன மற்றும் இஷார ஹேமாந்த ஆகியோரின் பெயர்களை நாமல் ராஜபக்ச பரிந்துரைத்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி கடிதம் மூலம் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு அமைய அமைச்சர் நசீர் அஹமட், எம்.எச்.டி.பி கருணாரத்ன என்பவரை பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமித்துள்ளார். இதற்கான நியமனக்கடிதம் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
பெரமுனவிற்கு ஆதரவாக ரணில்..!பாரிய தடையாகவுள்ள பசில்: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
