செலவிடப்படாத பாதீட்டு நிதி சேமிப்பா..! அரசின் நிர்வாகத் தோல்வியை சபையில் அம்பலப்படுத்தும் நாமல்
அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகளை விமர்சித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் பொழுதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அத்தியாவசியப் பொருட்களான பால்மா மற்றும் மருந்துகளுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படாமல், வரிக் கொள்கைகள் மூலம் சாதாரண மக்கள் மீது அதிக சுமை சுமத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களுக்கான நிவாரணம் சேமிப்பாக மாற்றம்
மேலும், துறைமுகம் மற்றும் கப்பல் கட்டுமானத் துறைகளில் இந்தியாவின் அதானி குழுமம், சீன நிறுவனங்கள் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர்களுடன் தொடர்புடைய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், புதிய நிர்வாகப் பிரிவுகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஏற்கனவே உள்ள நிறுவனங்களைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விளையாட்டு, விவசாயம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அனர்த்த நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான நிதிகள் நிர்வாகத் தாமதங்களால் செலவிடப்படாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செலவிடப்படாத நிதியை வீண் செலவுகளைக் குறைத்ததன் மூலம் கிடைத்த சேமிப்பாக அரசாங்கம் காட்டுகின்றது. ஆனால், அது திட்டங்களைச் செயல்படுத்தத் தவறியதன் அடையாளமாகவும் இருக்கலாம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
60 மில்லியன் பணத்தை திருப்பி அனுப்பிய யாழ். மாவட்டம் - NPP கையில் சிக்கிய அரசியல்வாதிகளின் கோப்புகள்