நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்..
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எயார்பஸ் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட அவரை, டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட அமர்வு உத்தரவிட்டது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (19) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
எயார்பஸ் (Airbus) விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச ஊழல் வழக்கு, மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
லிமினியும் வருகை
குறித்த வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகுவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க உள்ளிட்டவர்களும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.
