மகிந்த, நாமலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ரணில் - ராஜபக்ச குடும்பத்திற்குள் குழப்பம்
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை, ராஜபக்சர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிதி மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் ரணிலின் கைதின் போது ராஜபக்சர்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பின.
அரசியல் நெருக்கடி
அந்தக் கோஷம் காரணமாக பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜபக்ச குடும்பத்திற்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் சனிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சாகர காரியவசம் மற்றும் பல பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி
இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திற்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியில் உள்ள மற்ற அனைத்து கட்சிகளும் மாநாட்டில் பங்கேற்பார்கள் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பங்கேற்கவில்லை என்றால், எதிர்க்கட்சியிலிருந்து தனிமைப்படுத்தப்படும் அபாயம் உள்ளது எனவும் கட்சியில் சிலர் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் கூட, கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பலமான கட்சியை உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொள்வாரா என்பது கேள்விக்குறியே.





தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
