பிள்ளையானை சிறையில் சந்தித்தது இரகசியமல்ல..! நாமல் பதிலடி

Namal Rajapaksa Pillayan Easter Attack Sri Lanka
By Kamal May 20, 2026 10:30 PM GMT
Report

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை, தாம் சிறையில் சந்தித்தமை இரகசியமல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் சந்திக்கச் சென்றமை தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பது ஒரு 'அரசியல் ஊடக நாடகம்' என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வருகிறாரா அசாத் மௌலானா! சிஐடியில் திடீர் திருப்பம் - சாரா ஜெஸ்மின் தொடர்பில் அம்பலமான உண்மைகள்

இலங்கை வருகிறாரா அசாத் மௌலானா! சிஐடியில் திடீர் திருப்பம் - சாரா ஜெஸ்மின் தொடர்பில் அம்பலமான உண்மைகள்


இரகசியமான விடயமல்ல. 

அத்துடன், பிள்ளையான் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அல்ல எனவும், தற்போதைய அரசாங்கம் இவ்வாறான ஊடக நாடகங்கள் மூலம் அரசியல் எதிரிகளை இலக்கு வைத்து உள்நோக்கத்துடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிள்ளையானை சிறையில் சந்தித்தது இரகசியமல்ல..! நாமல் பதிலடி | Namal Accueses Npp

ஊடகங்கள் வாயிலாக இந்தச் செய்தியை அறிந்த பின்னர், தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விசேட பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2018/19 காலப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையிலிருந்தபோது, நான் அவரைச் சந்திக்கச் சென்றது ஒரு இரகசியமான விடயமல்ல. உண்மையில், நான் அங்கு சென்றமைக்கான சிறைச்சாலை பதிவுகளை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

அக்காலக்கட்டத்தில், அவர் 2015 ஜனாதிபதித் தேர்தலிலும், 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு எமது கூட்டணியின் பங்காளியாக இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

அறியக்கிடைத்துள்ள தகவல்களின்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பிரான்ஸ் வரை சென்றுள்ளது. இது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என தெரிவித்துள்ளார்.

பிள்ளையானை சிறையில் சந்தித்தது இரகசியமல்ல..! நாமல் பதிலடி | Namal Accueses Npp

தாம் பிள்ளையானைச் சந்தித்ததை உறுதிப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் இவ்வளவு தூரம் பயணித்தார்கள் என்றால், அது அப்பட்டமான பொதுப்பண விரயம் என தெரிவித்துள்ளார்.

எனக்குத் தெரிந்தவரை, பிள்ளையான் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அல்ல. அப்படியாயின், அரசாங்கம் இவ்வாறான ஊடக நாடகங்களை நடத்தி யாரை திருப்திப்படுத்த முயல்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகளில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! அரவிந்தவின் வீட்டில் இரவு இருந்த மற்றுமொரு நபர்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

தேசிய மக்கள் சக்தியும் (NPP) பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல கதைகளை சமூகமயமாக்கியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் தற்போது இந்தத் துயரத்தை அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதற்காகப் பயன்படுத்த முயலுமானால், அது இன்னமும் உண்மையான பதில்களையும் நீதியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும் என தெரிவித்துள்ளார்.

பிள்ளையானை சிறையில் சந்தித்தது இரகசியமல்ல..! நாமல் பதிலடி | Namal Accueses Npp

எந்தவொரு நியாயமான விசாரணைக்கும் முகங்கொடுக்க நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அத்துடன், நிலவும் சந்தேகங்களைத் வெளிப்படைத்தன்மையுடன் தீர்த்துக்கொள்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் செய்ய வேண்டியது, அரசியல் நாடகங்கள் மற்றும் ஊடகத் தலைப்புச் செய்திகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, நாட்டு மக்களுக்கு அர்த்தமுள்ள பலன்களைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

முடிவுக்கு வந்தது காங்கிரஸின் 59 ஆண்டு கால காத்திருப்பு - நாளை இடம்பெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க தருணம்

முடிவுக்கு வந்தது காங்கிரஸின் 59 ஆண்டு கால காத்திருப்பு - நாளை இடம்பெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க தருணம்

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US