கொக்குவில் சந்தை தொடர்பாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
கொக்குவில் சந்தை தொடர்பான அறிவித்தல் ஒன்றினை நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப்பொருட்கள் வெட்டுவதற்கு மற்றும் இறால் சுத்தம் செய்வதற்குமான கடடணங்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்படுகின்றது.
1. 1 கிலோ கிராம் மீன் வெட்டுவதற்கு 50 ரூபா
2. 1 கிலோ கிராம் நண்டு வெட்டுவதற்கு 50 ரூபா
3. 1 கிலோ கணவாய் வெட்டுவதற்கு 100 ரூபா
4. 1 கிலோ கிராம் சுறா மீன் வெட்டுவதற்கு 100 ரூபா
5. 1 கிலோ கிராம் திருக்கை வெட்டுவதற்கு 50 ரூபா
6. 1 கிலோ கிராம் பெரிய இறால் சுத்தப்படுத்துவதற்கு 100 ரூபா
7. 1 கிலோ கிராம் சிறிய இறால் சுத்தப்படுத்துவதற்கு 120 ரூபா
முறைப்பாடுகள்
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக கட்டணம் எதுவும் அறவிட முடியாது. அவ்வாறு அறவிடப்படின் 021 2222700 அல்லது 021 2212178 என்ற இலக்கங்களூடாக பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.
விசாரணைகள் மூலம் மேலதிக கட்டணம் அறவிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் உரியவர்களுக்கு எதிராக சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அத்துடன் கொக்குவில் பொதுச் சந்தையில் கடலுணவு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கடலுணவுப் பொருட்களினை வெட்டுதல் சுத்தப்படுத்தில் ஈடுபடமுடியாது.
கொக்குவில் பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரமாக விற்பனைச் செயற்பாட்டில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
கொக்குவில் பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரமாக போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என தவிசாளர் தெரிவித்துள்ளார்.


சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
