நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றம்(Photo)
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்வின்போது, இனப்படுகொலை இடம் பெற்றது தொடர்பாக கனடிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரதேச சபையில் வரவேற்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை

கனடிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான். அதற்கு நீதி கிடைக்க வேண்டும் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணை

இதற்கமைய, நல்லூர் பிரதேச சபையின் அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அ.மதுசூதன் குறித்த தீர்மானத்தை சபையில் கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து அவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam