அலங்காரக் கந்தன் நல்லூரான் மகோற்சவத்தின் 15ஆம் நாள் (Live)
அழகு தெய்வம் முருகனுக்கு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன.
யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும்.
நல்லூர் கந்தன் என்றால் அலங்காரக் கந்தன் என்று பொருள். கதிர்காமக் கந்தனை காவற்கந்தன் என்றும், செல்வச்சந்நிதியானை, அன்னதானக் கந்தன் என்றும், அழைப்பதுபோல் நல்லூரானை, முருகபக்தர்கள் அலங்காரக் கந்தன் என்றும் அழைப்பதுண்டு.
அழகிய முருகன், அலங்கார வடிவில், தமிழ் கடவுளாக, தமிழர்கள் வாழும் வட பகுதியில், நல்லூரானாக குடிகொண்ட இடம்தான் நல்லூர் கந்தசாமி திருக்கோவில்.
15 ஆம் நாள்
முருகனின் ஆறுபடை வீட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இலங்கையிலுள்ள நல்லூர் கந்தனுக்கும், கதிர்காமக் கந்தனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 15 ஆம் நாள் இன்றாகும்.

இலங்கையின் வடக்கில் குடி கொண்டு வீற்றிருக்கும் அறுபடை வீடுடைய வள்ளி மணாளன் நல்லூர் முருகனின் மகோற்சவ பெருவிழாவானது கடந்த 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆடம்பமானது.
சிறப்பு பூஜை நல்லூர் முருகப்பெருமானின் மகோற்சவ தரிசனம் காண உள்நாட்டில் மட்டும் அல்லாது வெளிநாட்டில் இருந்தும் ஆயிரமாயிரம் பக்தர்கள் வருடாவருடம் வருகைதருவது வழக்கமாகும்.
அந்த வகையில் இன்றைய தினம் நல்லூரானுக்கு 15 ஆம் நாள் பூஜை இடம்பெறுகிறது.
இன்றைய காலை பூஜையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மலர்மாலை பூஜையுடன் சிறப்பு பூஜைகள் இடம்பெறவுள்ளது.
மேலும் முருகப்பெருமான் தங்க மயில் வாகனதிலும் வள்ளி தெய்வானை வெள்ளி அண்ண வாகனத்திலும் உள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.
அதன் பின் சிறப்பு பூஜைகளுடன் கந்தனுக்கு தோத்திர பாடல்கள் பாடி மேல வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் இடம்பெறவுள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam