வினை தீர்க்கும் நல்லூர் வேலவனின் மகோற்சவ பெருவிழாவின் 13ஆம் நாள் (Live)
வினை தீர்க்கும் நல்லூர் வேலவனின் விழா என்றால் உலக வாழ் தமிழ் மக்கள் மத்தியில் ஓர் இனம்புரியாத உணர்வு பிரவாகித்து வரும்.
இருபத்தைந்து நாள் விழாவும் பக்திப்பரவசம் நிரம்பியிருக்கும்.
இது யாழ் மாவட்டத்தில் மட்டுமல்ல, அந்த மாவட்டத்திற்கு வெளியிலும் புலம்பெயர்ந்து சென்று வேறு நாடுகளில் வேருடன் விளைந்திருக்கும் எம் தமிழ் உறவுகளும் நல்லூரானுக்கென அந்த இருபத்தைந்து நாட்களும் விரதம் நோற்று முருகனின் அருளை பெற்றுக்கொள்வர்.
தமிழர்களின் தனித்துவத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் உலக மக்களுக்கு உரத்துரைக்கும் ஒரு விழாவாகவே நல்லூர்க்கந்தன் திருவிழா நோக்கப்படுகிறது.
அந்த வகையில் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 13 ஆம் நாள் இன்றாகும்.
13 ஆம் நாள் பூஜை
இலங்கையின் வடக்கில் குடி கொண்டு வீற்றிருக்கும் அறுபடை வீடுடைய வள்ளி மணாளன் நல்லூர் முருகனின் மகோற்சவ பெருவிழாவானது கடந்த 21 ஒன்றாம் திகதி கொடியேற்றத்துடன் ஆடம்பமானது.
சிறப்பு பூஜை நல்லூர் முருகப்பெருமானின் மகோற்சவ தரிசனம் காண உள்நாட்டில் மட்டும் அல்லது வெளிநாட்டில் இருந்தும் ஆயிரமாயிரம் பக்தர்கள் வருடாவருடம் வருகைதருவது வழக்கமாகும்.
அந்த வகையில் இன்றைய தினம் நல்லூரானுக்கு 13 ஆம் நாள் பூஜை இடம்பெறுகிறது.
இன்றைய காலை பூஜையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மலர்மாலை பூஜையுடன் சிறப்பு பூஜைகள் இடம்பெறவுள்ளது. மேலும் முருகப்பெருமான் தங்க மயில் வாகனதிலும் வள்ளி தெய்வானை வெள்ளி அண்ண வாகனத்திலும் உள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.
அதன் பின் சிறப்பு பூஜைகளுடன் கந்தனுக்கு தோத்திர பாடல்கள் பாடி மேல வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் இடம்பெறவுள்ளது.