யாழ். மாநகர சபையினருக்கு பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி கையளிப்பு
யாழ். மாநகர சபையினருக்கு ஆலய நல்லூர் சம்பிரதாய முறைப்படி இன்றையதினம்(27.05.2025) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குபிள்ளையால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தின் போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகர சபை வளாகத்தில் தோரணங்கள் கட்டி அலங்காரங்கள் அமையப்பெற்றிருந்தது.
யாழ். மாநகர சபையின் பணிகள்
நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் யாழ். மாநகர சபை ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
