யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம்..
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் நேற்று(3) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்றைய தினம் மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று வள்ளி, தேவசேனா சமேதரராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நல்லூர் முருக பெருமான் வெளிவீதியுலா வந்தார்.
அம்பாறை மாவட்டம்
கார்த்திகை தீபத் திருவிழாவில் இம்முறை பல வீடுகள் இருளில் மூழ்கிக்காணப்பட்டன.
இவ்வாறு இருளில் மூழ்குவதற்கு காரணம் விளக்கு மற்றும் எண்ணேய் பற்றாக்குறை என மக்கள் தெரிவித்தனர்.

இது தவிர டித்வா புயல் அனர்த்தம் காரணமாக பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டமை ஆகும்.
8 நாட்களாக சீரான மின்சாரம் குடிநீர் இன்மை எரிவாயு தட்டுப்பாடு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு பெற்றோல் டீசலுக்கு மக்கள் வரிசை என்பன இதில் உள்ளடங்கும்.









