நல்லூர் கந்தனின் திருமஞ்ச திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா இன்று (18) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விசேட, அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானைக்கு விசேட அபிசேக, ஆராதனைகள் மேற்கொளளப்பட்டுள்ளன.
விசேட பூஜைகள்
இதன்பின்னர், முருகப்பெருமான் எழுந்தருளி திருமஞ்சத்தில் வீற்று, வள்ளி, தெய்வானையுடன் உள்வீதி, வெளி வீதியூடாக வலம் வரப்பட்டுள்ளது.
மேலும், இந்த மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்துள்ளனர்.
அதேவேளை, பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் வழிபாடுகளில் கலந்து கொண்டு முருகப்பெருமானிடம் இஷ்ட சித்திகளைப்பெற்று சென்றுள்ளனர்.















சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
