நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் சவாமிகளின் பூதவுடல் இந்து மயானத்தில் தகனம்
இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று(2) நல்லை ஆதீனத்தில் நடைபெற்றுள்ளது.
கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே குரு முதல்வர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று(1) இறையடி சேர்ந்துள்ளார்.
இறுதி கிரியை
குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு நிலையில் இன்று மாலை 4 மணியளவில் சுவாமிகளின் இறுதி கிரியைகள் நடைபெற்றுள்ளது.
அரை நூற்றாண்டு காலம் ஈழத்து சைவ சமயத்தின் தலைமகனாக விளங்கிய தம் வாழ்வை மிக இளமை காலத்திலிருந்து சைவத்திற்கு தந்த ஆதீன சுவாமிகளுடைய இறுதி கிரியைகளில் சைவ உலக மக்களை திரண்டு பங்கேற்குமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்திருந்தது.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பூதவுடல் செம்மணி இந்து மாயனத்தில் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது.













