தற்காலிக விடுப்பில் வந்த நளினி: தாயாரின் உருக்கமான கருத்து
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வரும் நளினி தற்காலிக சிறை விடுப்பில் வெளிவந்துள்ளதால், இது குறித்து அவருடைய தாய் வேதனையுடன் சில தகவல்களை கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நளினி பெண்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவர் கணவர் முருகன் உட்பட ஏழு பேர் இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள தன் மகள் நளினியை தற்காலிக விடுப்பில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, நளினிக்கு தற்காலிக விடுப்பு கொடுக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, அவர் கடந்த மாதம் இறுதியில் ஒரு மாத தற்காலிக விடுப்பில் வெளிவந்தார்.
இதனையடுத்து இது குறித்து அவருடைய தாயார் பத்மா பிரபல தமிழக ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், முதலில் நான் தமிழக முதல்வருக்கு தான் நன்றி சொல்ல விரும்புகிறேன். என் மகளை நான் பார்ப்பேனா? இல்லையா? என்ற வேதனையில் இருந்தேன்.
ஏனெனில் என்னுடைய உடல்நிலை அந்தளவிற்கு உள்ளது. அவளை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன்.
இப்போது அவள் என் அருகில் இருக்கிறாள். எங்கள் வீட்டிற்கு வெளியில் பொலிசார் இருந்தாலும், நான் அவளுக்கு தேவையானதை செய்து கொடுக்கிறேன், எனக்கு தேவையானதை அவள் செய்து கொடுக்கிறாள்.
இது எனக்கு ஒரு வித நிம்மதியை கொடுக்கிறது. அவள் இப்படி என் அருகில் இருக்கும் போதே என் என்று நினைப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri