நளிந்த ஜயதிஸ்ஸ யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று(27.06.2026) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது புதிய இருதய கதிரியக்க ஆய்வு கூடத்தை நாடா வெட்டி திறந்து வைத்ததுடன் நவீன வைத்திய இயந்திரங்களை வைத்தியசாலைக்கு கையளித்துள்ளார்.
தீப் பரவலுக்குள்ளான மருந்துக் களஞ்சியசாலை
வைத்தியசாலையின் அருங்காட்சியத்தையும் பார்வையிட்டதுடன் வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பிலும் கேட்டு அறிந்துகொண்டார்.

அண்மையில் தீப் பரவலுக்குள்ளான மருந்து களஞ்சியசாலையினையும் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் சுகாதார அமைச்சின் செயலாளர் அணில் ஜெயசிங்க, வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









