நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா(Photos)
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வணங்கி ஆசி பெற்றுக்கொண்டனர்.
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று(02.07.2023) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தேர்த்திருவிழா
அதிகாலை 04 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா வந்த அம்பாள் காலை 08.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு , அம்பாளை வணங்கி அருளாசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா
இதேவேளை அச்சுவேலி பத்தமேனி மிட்டிலாங் கூடல் நடராஜ அம்பலவாணர் விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா இன்றைய தினம்(02.07.2023) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.