எமது பயணத்தினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன- சாணக்கியன்
எமது பேரணியினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியின் மூன்றாவது நாள் இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசியகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பேரணி வரும் வீதிகளில் ஆணிகளை வைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை தடுத்து நிறுத்தும் மிக மோசமான முயற்சிகள் இன்று இடம்பெற்றுள்ளது என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதனை யார் செய்தார்களோ தெரியாது. நாங்கள் உங்களை அடிக்க வரவில்லை. குழப்பம் செய்ய வரவில்லை. நியாயம் கேட்டே செல்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
