நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமனாப்படை மேற்கொண்ட விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
நேற்று காலை உணர்வுபூர்வமாக நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள நினைவாலயத்தில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த குழந்தை செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவுகள், பொதுமக்கள்,அரசியல் பிரமுகர்கள்,மாணவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
யூடியூப்பருக்கு அனுமதி
எனினும் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்வில் செய்தி சேகரிக்க வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதியளிக்கவில்லை என காரணம் காட்டி ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளரிடம் ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளனர்.
இந்நிலையில், தன்னால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லையென்றும், பாடசாலை அதிபரிடம் தான் அனுமதிக்குமாறு தொலைபேசியில் தெரிவிப்பதாக தெரிவித்த நிலையிலும் நாகர்கோவில் மகாவித்தியாலய அதிபரால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேவேளை, அதிபரின் உறவினரான வல்வெட்டித்துறையை சேர்ந்த யூடியூப்பர் ஒருவருக்கு நினைவேந்தல் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
