நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை மறு அறிவித்தல் வரை முடக்கம்
இந்தியா (India) - நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் சேவையினை இன்று (19.05.2024) ஆரம்பிக்கவிருந்த நிலையில் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் மே 19 வரையில் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டிருந்தது.
முன்பதிவு கட்டணம்
இந்நிலையில், கப்பலில் காணப்படும் சில பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ததன் பின்னரே உரிய அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, பயணச்சீட்டுகளுக்காக முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என இந்த் ஸ்ரீ எனப்பபடும் தனியார் படகுசேவை நிறுவனத்தின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு மீள பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri