யாழ்.காரைநகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(18.05.2024) வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துண்டுபிரசுரம் விநியோகம்
தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும் முன்னாள் போராளியுமான ஆண்டி ஐயா விஜயராசவினால் பொது சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் காரைநகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நினைவேந்தலில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான தவமணி , நாகராஜா, சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam