காலநிலை சீர்கேட்டினால் நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை இரத்து
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை 2 நாட்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் சேவை, பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை (15) மற்றும் வியாழக்கிழமை (17) ஆகிய இரண்டு நாட்களுக்கு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கப்பலை இயக்குவதில் சிரமம்
இதன் காரணமாக, கடல் சீற்றமாக இருக்கும் மற்றும் சூறைக்காற்று வீசும் என்பதாலும், கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலும் நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
