நாகவிகாரையில் இடம்பெற்ற வஸ்திர தானமும் - கட்டின பிங்கல வைபவமும்
யாழ். ஸ்ரீ நாகவிகாரையின் வருடாந்த வஸ்திர தானமும், கட்டின பிங்கல வைபவமும் நேற்று(12) இடம்பெற்றது.
தமிழ் பெளத்த காங்கிரஸ், சர்வதேச இந்து பெளத்த ஒற்றுமைக்கான அமைப்பு மற்றும் ஈழத்து இந்து சமுதாயப் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ். ஸ்ரீ நாகவிகாரையில் இடம்பெற்றது.
வஸ்திர தானமும், கட்டின பிங்கல வைபவமும்
யாழ்ப்பாணம், ஆரியகுளம் ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளோடு வீதி உலா ஆரம்பமாகி யாழ். நாக விகாரையை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசேட வழிபாடுகளுடன் வஸ்திர தானமும், கட்டின பிங்கல வைபவமும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், நாகவிகாரை விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர், மறவன்புலவு க.சச்சிதானந்தன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க குமார, இந்திய தூதரக அதிகாரிகள் உட்படப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan