ஹரக் கட்டாவின் மனைவி கைது செய்யப்படவில்லை! 500 மில்லியன் இழப்பீடு கோரி வழக்குத்தாக்கல்
நதுன் சிந்தகவின் மனைவி மஹாவெவா மஹேஷிகா மதுவந்தி, கெஹல்பத்தர பத்மேவுடன் மலேசியாவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறும் செய்தி தவறானது என்றும், இவ்வாறான செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி சட்ட வழக்கு தொடர்ந்துள்தாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆட்சேபனைகளை நதுன் சிந்தகவின் சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன மூலம் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களால் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், நதுன் சிந்தக மற்றும் அவரது குடும்பத்தினரின் சமூக நற்பெயருக்கு சேதம் விளைவித்துள்ளதாகவும் இந்த ஆட்சேபனைகள் கூறுகின்றன.
தவறான செய்தி
இந்த தவறான செய்தி வெளியிடப்பட்டது அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேலும் ஆட்சேபனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொய்யான செய்தியால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட மன உளைச்சல், நற்பெயர் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவற்றிற்காகவே மஹாவெவா மஹேஷிகா மதுவந்தி 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியதாக என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
