வெலிகம பிரதேச சபையின் மொட்டு கட்சி பெண் உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
வெலிகம பிதேச சபையின் மொட்டு கட்சி பெண் உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு நீதி வேண்டும் என்றும் சஞ்சனா என்ற குறித்த பெண் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், எனது வீட்டிற்கு கெப் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் 24 ஆம் திகதி சபை அமர்வுக்கு செல்வதா என்று கேட்டார்.
கொலை மிரட்டல்
இதனையடுத்து, சபை அமர்வுக்குச் சென்றால் உன்னைக் கொலைச் செய்து காணாமல் செய்வதாக தெரிவித்தார்.
அத்தோடு, தான் கடந்த 10 வருடங்களாக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே, இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு நீதி வேண்டும் என சஞ்சனா தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேச சபையில் இதற்கு முன்னரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவம் நிறைவடையாத நிலையில் இந்த கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |