ரவிராஜை கொலை செய்தவர் யார்..! விரைவில் வெளியாகும் அசாத் மௌலானாவின் ஆதாரங்கள்
ரவிராஜ் படுகொலை தொடர்பில் அசாத் மௌலானா கூறிய தகவல்கள் பல என்னை வந்து சேர்ந்திருக்கின்றன. அவை அதிகாரபூர்வமாக விரைவில் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ரவிராஜை படுகொலை செய்தவர் யார், படுகொலை செய்வதற்கு உத்தரவிட்டவர் யார், முதல் உத்தரவு யாரிடம் இருந்து வந்தது, இறுதி உத்தரவு யாரிடம் இருந்து வந்தது என்றெல்லாம் அசாத் மௌலான பல தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.

நாட்டின் முதற்பிரஜைக்கு சரியான கவனிப்பை மட்டக்களப்பில் தருவோம்! சபையில் கிண்டலாக கூறிய சாணக்கியன்(Video)
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
என்னையும் கொலை செய்ய முயன்றனர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
திரிபோலி என்று சொல்லப்படும் அந்த கொலைக் குழு முதலில் கொலை செய்ய முயற்சி செய்தது என்னை. என் பெயரும் சொல்லப்பட்டது. ஆனால் அது சாத்தியமாகவில்லை என்றும் சொல்லப்பட்டது.
எல்லா பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், எல்லா பொலிஸாரும், இராணுவத்தினரும் மோசமானவர்கள் அல்லர். ரவிராஜ் படுகொலை செய்யப்படும் போது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் கொல்லப்பட்டாரே.
இந்த அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக, அரசியல் தேவைக்காக சில குழுக்களை வைத்திருக்கின்றார்கள். இது சாதாரண பொலிஸாருக்கு தெரியாது.
எனக்கு இருந்த ஆபத்து தொடர்பில் நல்லெண்ணம் கொண்ட பொலிஸார் எனக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.
நானும், ரவிராஜூம் கலந்து கொள்ளவிருந்த களுத்துறை கூட்டத்தில், அந்த மேடைக்குப் பின்னால் இருந்து கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
