சனல் 4 தொடர்பில் ஏன் பதில் வழங்க வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரணிலின் கேள்வி(Video)
சனல் 4 ஊடகத்தை பிரித்தானியாவில் பலரும் கண்டு கொள்வதில்லை. அவ்வாறான ஒரு பின்னணியில் சனல் 4 ஊடகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் பதில் அளிக்க வேண்டும்? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜேர்மனியில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கோபத்துடன் ரணில் பதில் வழங்கியிருந்தமை இலங்கையில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், அந்த நேர்காணலில் ரணில் வழங்கிய பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சனல் 4 ஊடகத்தின் குற்றச்சாட்டுகளை மட்டும் ஏன் கேள்வியாக கேட்கின்றீர்கள்?
பல்வேறு வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். சட்டமா அதிபர் உள்ளிட்ட சிலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நான் ஒரு குழுவினை நியமித்துள்ளேன். நாடாளுமன்ற குழு ஒன்றையும் இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமித்திருக்கின்றேன் எனவும் அவர் நேர்காணலில் வைத்து குறிப்பிட்டார்.
முழுமையான விபரங்களுக்கு கீழ்வரும் காணொளியைப் பார்க்க,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
