செம்மணி விவகாரம்: போராட்டத்தில் குதித்த நாம் தமிழர் கட்சியினர்
செம்மணியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம், நேற்றையதினம்(05.07.2025) மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கை அரசு மீது ஐநா மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும், சர்வதேச நீதிமன்ற விசாரணையை நடத்தி இராணுவக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் போன்ற பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
மௌனம் காத்த திமுக அரசாங்கம்
அத்துடன், இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது, அப்போதைய தமிழக திமுக அரசாங்கம் மௌனம் காத்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
