மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை பெருமைப்படுத்தும் நாம் 200 (Photos)
மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை பெருமை படுத்தும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் மலையகம் நாம் 200 நிகழ்வு தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், செயலாளர் ஜீவன் தொண்டமான் கட்சி உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.