சஹ்ரான் தங்கியிருந்த அறை தொடர்பில் விலகாத மர்மம்
2019 ஏப்ரல் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை சஹ்ரான் தங்கியிருந்த ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டல் அறையில் அதற்கு முன்னர் யார் தங்கியிருந்தார்கள் என பதிவு செய்யப்படாமல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஈஸ்டர் தாக்குதலுக்காக சஹ்ரானும் இல்ஹாமும் தங்கியிருந்த கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலின் அறை எண் 616 என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.
நீதிமன்றப் பதிவேடுகள்
கடந்த அரசாங்கத்திடம் இதுபற்றி கேட்ட போது, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அப்படி ஒன்றும் இல்லை என கூறினார்.
சஹ்ரான் இந்த அறைக்கு வருவதற்கு முன், சிலர் இந்த அறையில் தங்கியிருந்ததாக, நீதிமன்றப் பதிவேடுகளில் ஷங்ரிலா மேலாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனவே, அப்படி ஒரு விடயம் இல்லை என கூற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |