22 பேரால் தவறான செயற்பாட்டிற்கு உள்ளான மாணவிக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு
மொனராகல, தனமல்வில பிரதேசத்தில் தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 16 வயது மாணவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அத்தியட்சகர் தாம் என கூறி மாணவியை அழைத்து வாக்குமூலம் பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மர்ம தொலைபேசி அழைப்பு
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பாடசாலை மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 22 ஆகும். அவர்களில் 15 பேர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
விளக்கமறியலில்
சம்பவத்தை ஆதரித்த பெண் ஒருவரையும் மேலும் மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.





காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
