பூசா சிறைச்சாலைக்குள் விழுந்த மர்ம பொதி! உள்ளிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள்
காலி, பூசா சிறைச்சாலைக்குள் விழுந்த மர்மப் பொதி ஒன்றினுள் இருந்து கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பெரும்தொகை உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மர்மப் பொதி, சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக சிறைச்சாலை வளாகத்துக்குள் விழுந்ததை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கண்டுள்ளனர்.
அதனையடுத்து, சிறைச்சாலை பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினரிடம் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மர்மப் பொதி கைப்பற்றப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரி ஒருவருக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய கடிதம்.. விடுதலைப் புலிகளை வைத்து பழிவாங்கும் செயல்
மேலதிக விசாரணை
குறித்த பொதிக்குள் இருந்து நான்கு கையடக்கத் தொலைபேசிகள், ஒரு சிம் அட்டை, பத்து மேற்புற கவர் நீக்கப்பட்ட சார்ஜர்கள், ஏழு டேட்டா கேபிள்கள், ஏழு ஹேண்ட்ப்ரீ கருவிகள், ஏழு புகையிலை என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து, குறித்த பொதியை தமது பொறுப்பில் எடுத்துள்ள விசேட அதிரடிப்படையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 11 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
