இந்தோனேசியாவில் உயிரிழந்த இலங்கை கோடீஸ்வரர்! வெளியாகும் புதிய தகவல்கள்
இந்தோனேசியாவில் உயிரிழந்த இலங்கை கோடீஸ்வரர் ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் தொடர்பில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த கோடீஸ்வரரின் மனைவி மற்றும் மனைவியின் நண்பி ஆகியோர் மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவரின் 1.5 மில்லியன் டொலர் காப்புறுதி பணம் மற்றும் பில்லியன் கணக்கான சொத்துக்கள் என்பன அவரின் மரணத்திற்கு காரணம் என சிஐடியினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒனேஷ் சுபசிங்கவின் கிரெட் கார்ட், கையடக்க தொலைபேசி உட்பட பல மில்லியன் பெறுமதியான பொருட்களுடன் மனைவியும், அவரது நண்பியும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
விசாரணைகள் முன்னெடுப்பு
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிஐடியினரும், இந்தோனேசியாவில் உள்ள விசேட பொலிஸ் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி ரொசா டி சில்வா தனது கணவரை கொலை செய்வதற்காக, தனது உதவியாளர் என்ற போர்வையில் பிரேசிலில் இருந்து தனது நண்பியை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சுபசிங்கவை கொலை செய்யும் நோக்கத்துடனேயே இந்தோனேசிய பயணம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என சிஐடியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.