கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பதுங்குகுழி - சிக்கிய முக்கிய நபர்
கொழும்பு, முல்லேரியா பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஒருவர் மறைந்திருந்த பதுங்குகுழி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முல்லேரியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சரத்குமார எனப்படும் ஜீட்டி என்ற சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உயிரிழந்த அங்கொட லொக்காவை முதலில் குற்ற செயலில் ஈடுபடுத்தியவர் அவர் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி வெலிகம பிரதேசத்தில் விசேட பொலிஸ் பிரிவினரால் 112 கிலோ கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேக நபர் ஜீட்டி என்பவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் முல்லேரியாவில் உள்ள தனது வீட்டினுள் பதுங்குக்குழி அமைத்து அதில் மறைந்திருந்தார் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
