நாய்கள் சாப்பிட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் கால் - குழப்பத்தில் பொலிஸார்
சிலாபம் கடற்கரையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் நாய்கள் சாப்பிட்டதாக கருதப்படும் குழந்தையின் கால் ஒன்றை கண்டுபிடித்த பிரதேசவாசிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
சிலாபம் பகுதியில் குழந்தை காணாமல் போனதாக எந்தவொரு முறைப்பாடும் அண்மைய நாட்களில் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் கால்
மேலும் சிலாபம் பொது வைத்தியசாலையிலும் அவ்வாறான குழந்தை மரணம் குறித்த தகவல் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த குழந்தையின் காலை நாய் எங்கிருந்து கொண்டு வந்தது என சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri