ரோஹிங்கியா அகதிகள் குறித்து முடிவெடுப்பதில் தடுமாறும் இலங்கை அரசாங்கம்

Refugee Trincomalee Government Of Sri Lanka Myanmar
By Parthiban Dec 21, 2024 11:51 PM GMT
Report

மியன்மாரில் சிறுபான்மையினராக இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், இலங்கை கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு, கடற்படையினரால் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரண்டு நாட்கள் ஆகியும், அவர்களின் நிலை தெளிவில்லாமல் உள்ளது.

மீட்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் குறித்து முடிவெடுக்க அவகாசம் தேவை என்று அரசாங்கம் கூறுகிறது.

மிரிஹானைக்கு பேருந்துகள் மூலம் அனுப்பப்பட்ட அந்த அகதிகள் இடையில் நிறுத்தப்பட்டு மீண்டும் திருகோணமலைக்கே அழைத்து வரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு

அடுத்தக்கட்ட நடவடிக்கை

மிரிஹானை நோக்கிய பயணத்தில் ஹபரணையை அடைந்த போது திருப்பி அனுப்பப்பட்ட அவர்களை நாளை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சந்தித்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருகோணமலை பிராந்திய ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

ரோஹிங்கியா அகதிகள் குறித்து முடிவெடுப்பதில் தடுமாறும் இலங்கை அரசாங்கம் | Myanmar Refugees Arrived Sri Lanka

அதேவேளை, வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர அந்த திணைக்கள அதிகாரிகள் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவரின் முகப்புத்தக பக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

“சட்ட விசாரணை, இடவசதி தொடர்பான தேவைகள் பூர்த்தி செய்தப்பட்டதன் பின்னர் ஓரிரு நாட்களில் இவர்கள் கையளிக்கப்படுவார்கள்” என அருண் ஹேமசந்திர பதிவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடலை, பாழடைந்த கடற்றொழில் படகொன்றில் வந்தடைந்த நிலையில், திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போர் அகதிகள் அடங்கிய குழு நீதிமன்றத்தால் மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பதினைந்து நாட்களுக்கும் மேலாக கடலில் பயணத்தை மேற்கொண்டு டிசம்பர் 19ஆம் திகதி காலை முல்லைத்தீவு கடற்கரையை வந்தடைந்த போரினால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியாக்கள், முப்பது வருடங்களாக போரினால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த தமிழக கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டனர்.

ஆங்கிலத்தில் பேச மறுத்த ஜடேஜா! உருவான மற்றுமொரு சர்ச்சை

ஆங்கிலத்தில் பேச மறுத்த ஜடேஜா! உருவான மற்றுமொரு சர்ச்சை

தேவையான வசதிகள் 

அன்றைய தினம் பிற்பகல், அவர்கள் வந்த அதே படகில் திருகோணமலை துறைமுகத்திற்கு மாற்றுவதற்கு இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

டிசம்பர் 20ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்த கர்ப்பிணிப் பெண், சிறுவர்கள் உள்ளிட்ட 115 பேர் அடங்கிய குழுவினரின் சுகாதார நிலையை பரிசோதித்த பின்னர் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ரோஹிங்கியா அகதிகள் குறித்து முடிவெடுப்பதில் தடுமாறும் இலங்கை அரசாங்கம் | Myanmar Refugees Arrived Sri Lanka

அந்த மக்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அரசாங்கம் அன்றே அறிவித்தது. "நாங்கள் அவர்களை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய நடத்துகிறோம்.

அவர்களுக்கு மருந்து, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறோம்" என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் 20ஆம் திகதி அன்று கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

அதேவேளை, கிழக்கைத் தலைமையகமாகக் கொண்ட அஹம் மனிதாபிமான வள நிலையம் (AHAM Humanitarian Resource Center) திருகோணமலை துறைமுகத்தில் கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தது.

மியன்மாரின் தொடர்ச்சியான அடக்குமுறையில் இருந்து தப்பிய ரோஹிங்கியாக்கள் வியாழக்கிழமை முல்லைத்தீவு கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், திருகோணமலை நீதவான் அர்ஜூன் ஆரியரத்தினம் களத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆய்வு செய்தார்.

விளக்கமறியல்  

115 பேர் கொண்ட குழுவினர் பிற்பகல் இரண்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (டிசம்பர் 21) அவர்களை மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லுமாறு நீதவான் அர்ஜூன் ஆரியரத்தினம் உத்தரவிட்டிருந்தார். படகை செலுத்திச் சென்ற சந்தேகிக்கப்படும் 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்கள் நேற்றைய (டிசம்பர் 21) நிலைப்படி திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

20ஆம் திகதி அன்று திருகோணமலை துறைமுகத்தில் ஒரு ரோஹிங்கியா போர் அனாதை பிரதேச ஊடகவியலாளர்களிடம் ஹிந்தி மொழில் உயிர் பிழைப்பதற்காக பர்மாவில் இருந்து வந்ததாக கூறியிருந்தார்.

“நீண்ட காலம் பர்மாவில் இருந்த போது பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்ததால் இங்கு வந்தோம். ரக்கைன் மாநிலத்தில் சண்டை வெடித்துள்ளது. எப்போதும் குண்டுவீச்சு.

இதனால்தான் அனைவரும் மிகவும் பயப்படுகிறார்கள். நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். மக்கள் செத்து மடிகிறார்கள். நிலைமை மோசமாகி வருவதால், எங்களால் அங்கு வாழ முடியவில்லை. அந்த சமயம் பணத்தை வசூலித்து இந்த படகில் நாட்டை விட்டு வெளியேறினோம்.

ரோஹிங்கியா அகதிகள் குறித்து முடிவெடுப்பதில் தடுமாறும் இலங்கை அரசாங்கம் | Myanmar Refugees Arrived Sri Lanka

ஏனென்றால், எங்களை ஏற்றுக்கொள்ளாமையால், தாக்கப்பட்டு, நாளுக்கு நாள் கொல்லப்படுகிறோம்.” டிசம்பர் 4ஆம் திகதி பர்மாவின் ரக்கையின் மாநிலத்தில் இருந்து மூன்று கடற்றொழில் படகுகளில் 120 பேர் கொண்ட குழுவொன்று புறப்பட்டதாகவும் அவர்களின் இரண்டு படகுகள் வழியில் பழுதடைந்ததாகவும் அதனால் அவர்கள் அனைவரும் ஒரே படகில் ஏறியதாகவும் எமது திருகோணமலை பிராந்திய ஊடகவியலாளர் குறிப்பிடுகின்றார்.

பயணத்தின் போது இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், அவர்கள் கடலில் வீசப்பட்டதாகவும் போர் அந்த ரோஹிங்கியாக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த 115 அகதிகளில் 39 ஆண்களும், ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 27 பெண்களும், 49 சிறுவர்களும் உள்ளடங்குவதாக திருகோணமலை பிராந்திய ஊடகவியலாளர் மேலும் தெரிவித்தார்.

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் ரகயின் மாநிலத்தில் முஸ்லிம் ரோஹிங்கியாக்களுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்திய 2017ஆம் ஆண்டு முதல் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. இவர்களில் 965,000 பேர் அண்டை நாடான பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ளனர்.

அநுர அரசாங்கத்தினை விமர்சித்துள்ள முன்னாள் எம்பி

அநுர அரசாங்கத்தினை விமர்சித்துள்ள முன்னாள் எம்பி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 21 December, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US