மியன்மாரில் எதிர்வரும் ஓராண்டுக்கு அவசர நிலை அமுல்: மியன்மார் இராணுவம் அறிவிப்பு
மியன்மாரில் எதிர்வரும் ஓராண்டுக்கு அவசர நிலை அமுல்படுத்தப்படுவதாக அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது.
மியன்மாரில் கடந்த சில வாரங்களாகவே 2020 நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும், அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.
இந்த சூழலில், மியன்மார் அரசாங்க ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை இராணுவம் சிறைபிடித்தது.
இதனால், அந்த நாட்டில் மீண்டும் இராணுவ புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், மியன்மாரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.
மியன்மார் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் இன்று நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், இராணுவத்தின் இந்த நடவடிக்கையால் அந்த நாட்டில் உச்சகட்ட அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றிபெற்றிருந்தார்.
ஆனால், இராணுவம் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
