வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் நிகழ்வு
திருகோணமலை மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான், வடக்கு - சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று (19.05.2024) காலை நடைபெற்றுள்ளது.
இதன்போது, சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து கிரியையோடு மடைப்பெட்டி ஆலயத்தின் பிரதம குருவினால் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா இடம் பெற்றுள்ளது.
விசேட பூஜைகள்
மேலும், காவடி எடுத்தல், வேளை நூல் கட்டுதல், பொங்கல் சாடி வைத்தல், பால்பழ பூஜை மற்றும் சிவலிங்க நாகதம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர்வார்க்கும் விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெற்றுன.
அதேவேளை, விசேட தீபாராதனைகளுடன் பூஜை இடம்பெற்று, ஸ்ரீமகாவிஷ்ணு ஆறுமுகவேல் சகிதம் அம்பாள் திருஉலாவந்து அருள் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், ஆலயத்தின் பிரதம குருவிற்கு ஆலய நிர்வாகத்தினால் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வாழ்த்து மடல் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |