முத்துராஜவல சதுப்பு நிலம் தொடா்பான வா்த்தமானிக்கு எதிராக கா்தினால் உயர்நீதிமன்றில் மனு
முத்துராஜவெல சதுப்பு நிலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் உயர் நீதிமன்றில் இடைக்கால தடை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
முத்துராஜவெல சதுப்பு நிலங்களுக்குச் சொந்தமான சுமார் 3,000 ஏக்கர் காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோாியே கர்தினால் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளாா்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்திச் சபையின் தலைவா், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வத்தளை, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனா்.
ஒக்டோபர் 07ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, முத்துராஜவெல சதுப்பு நிலத்தின் சுமாா் 3,000 ஏக்கர் காணி, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கர்தினால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வர்த்தமானி தீர்மானத்தினால் பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்று கர்தினால் தமது மனுவில் கோாியுள்ளாா்.
