22 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முத்து நகர் விவசாயிகள்
தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக அபகரிக்கப்பட்டதையடுத்து தொடர் போராட்டத்தில் தீர்வு கிடைக்கும் வரை ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தம்மை ஏமாற்றி வருவதாகவும் இதுவரை வழங்கப்பட்ட எவருடைய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தமக்கான தீர்வை எழுத்து மூலமாக வழங்க வேண்டும் எனவும் அதுவரை நாம் இவ்விடத்தை விட்டு நகர மாட்டோம் என கவனயீர்ப்பில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி, திருகோணமலையின் நிலங்களையும் வளங்களையும் சூரையாடுவதை நிறுத்து, எங்களை வாழ விடு, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு, அரசே நிறுவனங்களை வைத்து 352 விவசாயிகளை வீதிக்கு இறக்காதே போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குறித்த விவசாயிகள் குதித்துள்ளனர்.
=| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri