முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக சத்தியக் கிரகப் போராட்டம்
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகள் 06 வது நாளாக தொடர்ந்தும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையிலே குறித்த போராட்டம் நேற்றையதினம்(22) திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு, இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம், பொய்கள் வேண்டாம்,விவசாயிகளை இப்படியா நடாத்துவது போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம்,அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கோரிக்கை
முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இந்த சத்தியக் கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் நடக்கின்றது, வெளிநாடுகளுக்கு மக்கள் விவசாய காணிகளை தாரை வார்த்து கொடுத்துள்ளனர், முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை தற்போது அபகரித்துள்ளனர், ஜனாதிபதி செயலகம் வரை போராடிய முத்து நகர் விவசாயிகளுக்கு தீர்வில்லை, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதும் தீர்வு தருவதாக கூறியவர்கள் தீர்வு வழங்கவில்லை. இது போன்று சம்பூரிலும் காணிகளை அபகரித்துள்ளனர்.எனவே மக்கள் பிரச்சினைகளை சமூகமாக தீர்த்து வைக்கும் படி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
