ஐபிசி தமிழின் அனுசரணையில் யாழில் முதன்முறையாக முத்தமிழ் விழா 2022 (LIVE)
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் அனுசரணையில் யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக “முத்தமிழ் விழா 2022” நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந் நிகழ்வானது இன்றைய தினம் (16) காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.
நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்பனவற்றுடன் விருந்தினர்கள் யாழ் மாநகர சபை முன்றலில் இருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது யாழ் மாநகர சபையால் இயல்துறைக்கான அரசகேசரி விருது கவிஞர்.சோ.பத்மநாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் “இன்றைய உலக நடைக்கு பொருந்தாத அறங்களை வகுத்துத்தந்த வள்ளுவர் குற்றவாளியா?” எனும் தொனியிலான “வழக்காடுமன்றம்” உட்பட நாத சங்கமம் மற்றும் இசை ஆராதணை என இசை நிகழ்வுகளும், சத்தியவான் சாவித்திரி மற்றும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஆகிய வரலாற்றியல்களை சித்திரிக்கும் நாடங்களும் அரங்கேறவுள்ளன.
மேலும், ஐபிசி தமிழின் அனுசரணையில் காலை முதல் இரவு வரை இயற்துறை, இசைத்துறை, நாடகத்துறை என மூன்று அமர்வுகளாக நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இயற்துறை அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
முத்தமிழ் விழா 2022 நிகழ்வின் நேரலை,












6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
