தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பிரித்தானியாவிலும்
உலகளாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கமானது தொடர்ந்தும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பல நாடுகளில் கொரோனா உருமாற்றம் பெற்ற நிலையில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸானது பிரித்தானியாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
லண்டனின் தென்மேற்கில் உள்ள Surrey பகுதியில் வசிக்கும் இருவருக்கே தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் பெற்ற கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் சமீபத்தில் பயணம் செய்தவர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளவில்லை என்பதால், அப்பகுதி உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸின் பரவும் வேகம் அதிகம் என்ற போதிலும் இது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த உருமாறிய வைரஸானது தடுப்பூசியின் செயல்திறனைக் குறைப்பதாக பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri