சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டும்! - அமைச்சர் வெளியிட்ட தகவல்
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இலங்கை உடன்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, நிதியத்தின் ஆதரவைப் பெற வேண்டுமாயின், இலங்கை முதலில் கருத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளதாகவும், நாட்டில் பரந்த அளவிலான உரையாடல் இடம்பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை 5 சதவீதத்துக்கும் குறைவாகக் குறைப்பதன் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது மட்டுப்படுத்தப்படும் என்று கூறிய அவர், எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றார்.
எந்த தரப்பினரும் சரக்குகளை சுதந்திரமாக இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். அமெரிக்க டொலரின் மதிப்பை குறைக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கினால், நிலைமை குறித்து மக்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.





இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
