மீண்டும் டெஸ்லாவுக்கு திரும்பும் மஸ்க்: ட்ரம்ப் வழங்கிய பதவியின் நிலை
உலகின் பணக்கார தொழிலதிபரான எலோன் மஸ்க் டெஸ்லாவில் மீண்டும் முழு நேரம் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் அவருக்கு வழங்கப்பட்ட 'DOGE' பதவியை பகுதி நேர வேலையாக செய்வதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் 'DOGE' பதவிக்காக செலுத்தும் காலம் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் என அவர் டெஸ்லா முதலீட்டாளர்களுடன் நடத்திய உரையாடலில் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் பாதிப்பு
டெஸ்லா அமெரிக்காவில் கார்களைத் தயாரித்தாலும், சில பகுதிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் பாதிப்பை எதிர்கொள்கிறது.
இதன் மூலம், ட்ரம்பின் வரிக் கொள்கைகள் காரணமாக டெஸ்லா நிறுவனமும் பாதிப்படைந்துள்ளமை தெரியவருகின்றது.
2025 முதல் காலாண்டில் டெஸ்லா வழமையை விட 50,000 கார்கள் குறைவாக விற்பனை செய்துள்ளது.
விற்பனையில் வீழ்ச்சி
கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே டெஸ்லா கார்களின் மிக குறைந்த விற்பனை ஆகும். ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி காட்டிய டெஸ்லா இப்போது விற்பனையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
DOGEஇன் தலைவராக மஸ்க் இருப்பதாலேயே டெஸ்லாவுக்கான விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்நிலையிலேயே, டெஸ்லா நிறுவனத்துக்காக அதிக நேரத்தை செலவிட மஸ்க் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |