முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் என்ற ஸ்ரீஹரன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரும், இன்றைய தினம் (13.03.2024) இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்னை மேல்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை
சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதனடிப்படையில், குறித்த மனு இன்று மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு உயர்ஸ்தானிகராலயத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri